மௌனம் கலைப்போம்” போர் எதிர்ப்பு பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கவிஞர் யுகபாரதி, சமீபத்தில் நடந்த ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை விஜய் வெளியிட்டநிலையில், இது தொடர்பாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
காம்ரேட் டாக்கீஸ் ஒருங்கிணைக்கும் “மௌனம் கலைப்போம்” போர் எதிர்ப்பு பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கவிஞர் யுகபாரதி, சமீபத்தில் நடந்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை விஜய் வெளியிட்டநிலையில், இது தொடர்பாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ”மூன்று நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான பத்திரிக்கையாக இருந்த ஒரு பத்திரிக்கை ஒரு கூட்டத்தை நடத்தி மொத்த தமிழ்நாட்டுடைய மௌனத்தையும் கலைத்துவிட்டார்கள். இதற்கிடையில்தான், தம்பி ராஜூமுருகன் ‘மௌனம் கலைப்போம்’ என்ற கேசட்டை வெளியிட போகிறோம் என்று என்னையும் அழைத்தார்.
அரசியல் எவ்வளவு தூரம் வணிகமாகிவிட்டது என்பதை நீங்கள் கவனமாக பார்க்க வேண்டும். நன்றாக யோசித்துப் பாருங்கள் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்று ஒரு நூலை வெளியிடுகிறார்கள் .. அதிலே அந்த புத்தகம் எப்படி விற்கப்படும் என்பதற்காகவே அது தயாரிக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள் .இது எவ்வளவு அபாயகரமான ஒரு சூழலை நோக்கி நம்மை அமரவைத்திருக்கிறது என்று பாருங்கள்..
அந்த கார்ப்பரேட் கைகளுக்குள் நம்முடைய சமூகம் சிக்கி சின்னாபினமாகிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இதை குறித்தெல்லாம் நம்முடைய மௌனத்தை நாம் கலைக்க வேண்டும்.. நாம் மௌனம் கலைக்கவில்லை என்றால் யார் யாரோ எதை எதையோ கத்திக்கொண்டே இருப்பார்கள். நாம் கேட்கிறவர்களாக மாறி போய்விடுவோம்.. மிகவும் கவனமாக நாம் செயலாற்ற வேண்டிய ஒரு தருணத்தை எட்டி இருக்கிறோம்.
தினேஷ் திரைப்படங்களுக்கும் பாடல் எழுதவேண்டும் என்று நான் கேட்டுக்கிறேன். ஆனால், அங்க சென்ற உடன் விஜய் முகத்தில் அம்பேத்கரை பார்க்கிறேன் என்று எழுதினால் அது காமெடியாக மாறிவிடும். ” என்று தெரிவித்துள்ளார்.