இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற நான்காவது மற்றும் இறுதி டி20 போட்டியில், இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற நிலையில், இந்த தொடரை இந்தியா 3–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 109 ரன்கள் மற்றும் திலக் வர்மா 120 ரன்கள் எடுத்தனர்.
இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு மற்றும் திலக் வர்மா கூட்டணி 200 ரன்கள் சேர்த்து அசத்தியது. இதன் மூலம் இந்திய அணிக்காக ஒரு விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட மிகப்பெரிய பார்டனர்ஷிப் என்ற சாதனையை இந்த கூட்டணிப் படைத்துள்ளது.