அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக எதிர்ப்பு தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நூதன போராட்டத்தை முன்னெடுக்கிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை சிறுமைப்படுத்தி பேசியதாக சர்ச்சைகள் எழுந்தது. தான் அப்படி பேசவில்லை என்றும், சிலர் தனது பேச்சை ஏஐ உதவியுடன் தவறாக சித்தரித்துள்ளதாகவும் அமித்ஷா விளக்கம் அளித்தார்.
எனினும் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமித்ஷாவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் திமுக சார்பில் அமித்ஷாவுக்கு எதிராக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் டிசம்பர் 28ம் தேதியன்று அம்பேத்கர் இயக்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டாம் நடத்த உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரம் முறை தொடர்ந்து அம்பேத்கர் பெயரை உச்சரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.