காற்றழுத்த தாழ்வுநிலைக் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட மொத்தம் 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
காற்றழுத்த தாழ்வுநிலைக் காரணமாக கடலூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டையில் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மாலை புயலாக மாற இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலதிக விவரங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்