மாவீரர் நாள் தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களிடத்தில் மாவீரர் நாள் என்பது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றி, தாய்நாட்டுக்காக தமது உயிரை நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். அத்தகைய மாவீரர்களின் நினைவு நாள், ஒவ்வொரு ஆண்டும் நவ.27 அன்று உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களால் அனுசரிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல் ஆகியவற்றை போல தமிழீழ அரசியல் என்பதும் முக்கியமானது. இதனை தங்கள் கொள்கைகளில் ஒன்றாக வைத்து செயல்படும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இருக்கின்றன. இந்நிலையில் மாவீரர் தினம் தொடர்பான பதிவொன்றை தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“மாவீரம் போற்றுதும், மாவீரம் போற்றுதும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று மாவீரர் தினத்தையொட்டி, நாதக உள்ளிட்ட தமிழ் தேசிய அமைப்புகள் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய்யின் பதிவு அரசியல் களத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.