மதுரையில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனா். மேலும் தேசியகீதம் பாடப்பட்ட பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டதாக கூறப்படுகிறது. இது தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்று இருந்தார். அப்போது நிகழ்ச்சியின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனா். பின்னர் தேசிய கீதத்தை பாடும்படி கூறி உள்ளனா்.
இதையடுத்து அவர்கள் தேசியகீதத்தை பாடி உள்ளனா். இதற்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடிய மாணவர்களை தடுத்து நிறுத்தி, தேசியகீதம் பாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.