துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து கூறிய நிலையில், அஜித் தெரிவித்த வாழ்த்து கவனம் பெற்றுள்ளது.
தமிழக துணை முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த வாழ்த்துக்களில் கவனம் ஈர்த்தது நடிகர் அஜித் கூறிய வாழ்த்துதான். பொதுவெளியில் வாழ்த்துகள், கருத்துகள் கூறுவதை தவிர்க்கும் நடிகர் அஜித், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு செல்போனில் பிறந்தநாள் வாழ்த்து கூறியது, இருவரின் நெருக்கம் குறித்து பேச வைத்துள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை லோகோவுடன் கூடிய தனது ரேசிங் பந்தய அணியின் காரை நடிகர் அஜித்குமார் அறிமுகப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்பே தனது நன்றியை தெரிவித்திருந்தார்.
சில வாரங்கள் முன் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய தவெக தலைவர் விஜய் தனது முதல் மாநில மாநாட்டில் வெளிப்படுத்தினார். அதற்கடுத்த சில நாட்களிலேயே, ரேஸ் விளையாட்டை முன்வைத்து, விளையாட்டுத் துறையில் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அஜித்திற்கு உதயநிதி அழைப்பு விடுத்தது பேசுபொருளானது.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து கூறிய நிலையில், அஜித் தெரிவித்த வாழ்த்து கவனம் பெற்றுள்ளது.
தமிழக துணை முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த வாழ்த்துக்களில் கவனம் ஈர்த்தது நடிகர் அஜித் கூறிய வாழ்த்துதான். பொதுவெளியில் வாழ்த்துகள், கருத்துகள் கூறுவதை தவிர்க்கும் நடிகர் அஜித், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு செல்போனில் பிறந்தநாள் வாழ்த்து கூறியது, இருவரின் நெருக்கம் குறித்து பேச வைத்துள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை லோகோவுடன் கூடிய தனது ரேசிங் பந்தய அணியின் காரை நடிகர் அஜித்குமார் அறிமுகப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்பே தனது நன்றியை தெரிவித்திருந்தார்.
சில வாரங்கள் முன் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய தவெக தலைவர் விஜய் தனது முதல் மாநில மாநாட்டில் வெளிப்படுத்தினார். அதற்கடுத்த சில நாட்களிலேயே, ரேஸ் விளையாட்டை முன்வைத்து, விளையாட்டுத் துறையில் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அஜித்திற்கு உதயநிதி அழைப்பு விடுத்தது பேசுபொருளானது.