வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ள நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாவதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்து சில வாரங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தென் மாவட்டங்கள் வரை கனமழை பெய்தது.
இந்நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் இது, அடுத்த 2 நாட்களில் தமிழகம் – இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.