புதுச்சேரியில் புயல் விடுமுறைக்கு ஈடாக டிசம்பர் மாதத்தில் உள்ள 3 சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது.
அப்போது பெய்த கனமழை காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகள் நேற்று செயல்படத் தொடங்கின.
ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு, திங்கட்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் கடந்த மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து. இந்த விடுமுறைகளுக்கு ஈடாக டிசம்பர் 7, 14, 21 ஆம் தேதிகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.