Read Time:1 Minute, 4 Second
சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும், மழை குறித்து அறிவிப்புகளை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் காரணமாக தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், விழுப்புரம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.