தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 6 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீண்டும் தமிழகத்தில் மெல்ல மழைப்பொழிவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதலே சென்னை தொடங்கி டெல்டா மாவட்டங்கள் வரை பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இதனால் இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் இன்று இரவு வரை மிக பலத்த மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த கனமழை பெய்ய உள்ளது. இதனால் மழையை கருத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.