தமிழக சட்டசபை அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது
ஆளுநர் உரையை தொடர்ந்து தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு, மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். மேலும் மக்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் பற்றியும், நிதி ஒதுக்கீடு பற்றியும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். கடந்த தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜூன் 20ம் தேதி நடைபெற்றது. ஜூன் 21க்குப் பிறகு, மானியக் கோரிக்கைகள் மீது சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதம் நடத்தினர். எம்எல்ஏ-க்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். ஜூன் 29ம் தேதி வரை 9 நாட்கள் காலை, மாலை என அவை கூடியது. அதன் பிறகு அடுத்த கூட்டம் எப்போது என்று கூறவில்லை. ஆனால் அடுத்த 6 மாதங்களுக்குள் கூட்டத்தை நடந்த வேண்டும்.
அடுத்த சட்டசபை கூட்டம் எப்போது?
ஜூன் 29ம் தேதி சட்டசபை முடிந்த நிலையில், டிசம்பர் 28ம் தேதிக்குள் சட்டசபை மீண்டும் கூட வேண்டும் என விதி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தயாராகி வருகிறது. பேரவைத் தலைவர் அப்பாவு, சிறப்புக் கூட்டத்துக்காக வேறு நாட்டிற்குச் சென்றுவிட்டு, கடந்த 17ஆம் தேதி மீண்டும் சென்னை வந்தடைந்தார். தற்போது, மீண்டும் சட்டசபையை கூட்டுவது குறித்து, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..தமிழக சட்டப்பேரவை கூட்டம் டிசம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. தமிழத்தில் சட்டம் ஒழுங்கு, அரசு ஊழியர்களின் கோரிக்கை, தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். இதனுடன் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை அதிகரிப்பையும் பற்றி பேச உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப் பேரவை என்பது, தமிழக அரசின் விதிகள் மற்றும் முடிவுகளைப் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் கூட்டம் ஆகும். மாநிலத்தில் அனைத்தும் சீராக நடைபெறுவதையும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய அரசு ஒன்றிணைந்து செயல்படுவார்கள். சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக ஆளுநர் உரையுடன் துவங்கும்.
டிசம்பர் 9ம் தேதி சட்டசபை கூட்டம்?
இறுதியில் டிசம்பர் 9ம் தேதி சட்டசபை கூட்டம் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டசபை எத்தனை நாட்கள் கூடும் என்பதை, சிறப்பு கூட்டம் நடத்தி முடிவு செய்யும் எனவும் குறிப்பிட்டார். டிசம்பர் 10 மற்றும் 11ம் தேதிகளில் கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் மக்களின் பாதுகாப்பு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் போன்ற முக்கிய தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமை தொகையில் மாற்றம் இருக்குமா?
பெண்களுக்கான உரிமைத் தொகை என்பது பெண்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் சிறப்பு நிதி ஆகும். தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அரசு பணம் கொடுத்து உதவுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி, பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை குறித்து விரைவில் சில முக்கிய தகவல் வெளியாகும் என்று கூறி வருகிறார். வரவிருக்கும் கூட்டத்தில், பெண்களுக்கு ஆதரவளிக்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதியவர்களை சேர்ப்பது மற்றும் அந்த திட்டத்தில் அதிக பெண்கள் சேருவதை எளிதாக்குவது பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.