Read Time:1 Minute, 7 Second
ஏற்கனவே ஜனவரி 14ஆம் தேதி முதல் பொங்கல் விடுமுறை வரும் நிலையில், ஜனவரி 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஜனவரி 12ஆம் தேதி தேர்த்திருவிழா மற்றும் 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு, ஜனவரி 13ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.