இன்று 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ளதை அடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்பட பல அரசியல்வாதிகள் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் தனது வாழ்த்து செய்தியில், “புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடுவோம், எங்கும் நலமே சூழட்டும்,” என்றும் வாழ்த்தி உள்ளார்.
அதேபோல், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது வாழ்த்து செய்தியில்,
“மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர், மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்போம். உண்மையான சமூக நீதியுடன் சமத்துவ தமிழகத்தை அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்,”
என்று தெரிவித்துள்ளார்.