தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பொதுச்செயலாளராக விளங்கும் புஸ்ஸி ஆனந்த் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் தவெக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று காலை ஒரு கடிதத்தை வெளியிட்டார். இந்த கடிதத்தில் அவர் தங்கைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரிதும் வேதனையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்தது அதற்காகவே இக்கடிதம் என்று குறிப்பிட்டிருந்தார். எல்லா சூழ்நிலையிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும்,அரணாகவும் பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியபடுத்துவோம் என்று அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
ஆளுநருடன் சந்திப்பு:
விஜய், இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையும் சந்தித்தார். அப்போது ஆளுநருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசளித்த அவர் தொடர்ந்து அவரிடம் கலந்துரையாடினார்.
புஸ்ஸி ஆனந்த் கைது:
தவெக தலைவர் விஜய், இன்று ஆளுநரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இன்னொரு பரபரப்பான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அனுமதி இன்றி பொதுமக்களுக்கு விஜய் எழுதிய கடிதத்தை நோட்டீஸாக கொடுத்ததாக கூறப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள புஸ்ஸி ஆனந்தை தற்போது தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர், மாலை 6 மணிக்கு மேல் விடுவிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.