கடந்த ஆண்டுகளைப் போலவே ரொக்கத் தொகையை வழங்க வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் இரண்டாயிரம் ரூபாய் வழங்கக் கோரி பாஜக சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. டோக்கனில் குறிப்பிடப்படும் நாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், நாள்தோறும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பெறும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளைப் போலவே ரொக்கத் தொகையை வழங்க வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் இரண்டாயிரம் ரூபாய் வழங்கக் கோரி பாஜக சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் நேரங்களில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.