தமிழ்நாட்டில் செயலாளர்கள் பொறுப்பில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில், 25 ஆண்டுகள் பணி முடித்த 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளர் நிலையில் பதவி அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று, 16 ஆண்டுகள் பணி முடித்த 19 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதலமைச்சரின் செயலாளராக உள்ள உமாநாத் ஐஏஎஸ் முதன்மை செயலாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஆளுநரின் செயலாளராக உள்ள கிரிலோஷ்குமார் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளராக டி.என்.வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.லால்வெனா உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.