Read Time:1 Minute, 13 Second
தான் ஒரு கிறிஸ்தவர் என கூறியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அது குறித்து பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் சத்தியமங்கலம் சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி, தன்னை கிறிஸ்துவர் என நினைத்தால் கிறிஸ்துவர், இஸ்லாமியர் என நினைத்தால் இஸ்லாமியர், இந்து என நினைத்தால் இந்து என தெரிவித்தார்.
விழாவில் பேசிய அவர், மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், அதை சொல்வதில் பெருமைப்படுகிறேன். நான் ஒரு கிறிஸ்தவன் என்று தெரிவித்தார்.
எனினும், நான் எல்லோருக்கும் பொதுவானவன் என்ற உதயநிதி, எப்போதும் அப்படித்தான் இருப்பேன் என்றும் கூறினார்.