இந்த ஆண்டு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பின் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
வருடம் தோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் சிறப்பு தொகுப்பையும், பொங்கல் பரிசு தொகையையும் வழங்குவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான தகவல்கள் வெளியாகி உள்ளன. பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கி கணக்கில் இல்லாமல் நேரடியாக வழங்கும் பட்சத்தில்.. பொங்கல் பரிசுக்கான டோக்கன் அடுத்த வாரம் இறுதியில் 20ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறையும் மஞ்சள் பையில் பொங்கல் பரிசு வழங்கப்படும். கடந்த 2022ம் வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 2023 வருடம் இதையடுத்து பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் கடந்த வருடம் வழங்கப்பட்டது.
அடுத்த வருடம் ஊரக உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் நிலையில் அதற்கு முன்பாக இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ரூபாய் 238.92 கோடி செலவிடப்படுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரே ரேஷன் கார்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் டோக்கன் வழங்கப்படும். அதில் நேரம், தேதி இருக்கும். அந்த நாளில் மட்டும் சென்று பரிசு பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.