ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது என ஊழியர்களை, கூட்டுறவுத் துறை எச்சரித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் சிறப்பு மளிகை தொகுப்புகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டன. சில கடைகளில் அவை விற்றது போக, மீதி கையிருப்பில் உள்ளன. இதனால் ரேஷன் பொருட்களை வாங்க வருவோரிடம் மளிகையை, ஊழியர்கள் கட்டாயப்படுத்தி விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், சிறப்பு மளிகை தொகுப்புகளில் விற்பனையாகாமல் இருப்பதை, திருப்பி அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடைக்கு வருவோரிடம் மளிகைப் பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கக் கூடாது எனவும், அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக கடைகளில் நோட்டீஸ் ஒட்டுமாறும், மண்டல இணை பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.