ஹூனான் மாகாணத்தில் இருக்கும் பிங்ஜியாங் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தங்கச் சுரங்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு 1,000 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால், தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இந்த தங்கம் சீனாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு, உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் சீனாவை பாதிக்காமல் இருக்க உதவும்.
இந்த தங்கச் சுரங்கம் நிலத்திற்கு அடியில் மிகவும் ஆழமாக அமைந்துள்ளது. அதாவது சுமார் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் தங்க நரம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்க நரம்புகள் என்பது பாறைகளுக்கு இடையே வரி வரியாக இருக்கும் தங்கம் தான். இந்த நரம்புகளில் மட்டும் சுமார் 300 மெட்ரிக் டன் தங்கம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் துளையிடப்பட்ட பாறைகளுக்கு நடுவிலும் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தோராயமாக 1000 மெட்ரிக் டன் தங்கம் இருக்கும் என்று கருதப்படுகிறது.