20 ஆண்டுகளாக நாள்பட்ட தும்மலால் சீனாவை சேர்ந்த இளைஞர் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரின் மருத்துவ சோதனை முடிவில் வந்த தகவலால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சீனாவை சேர்ந்த 23 வயதான Xiaoma என்பவருக்கு, தொடர்ச்சியான தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை இருந்துள்ளது. Xiaoma-வின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இது இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அவர் மருத்துவமனைக்கு சென்றபோது ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் தெரியவந்துள்ளது. அதில், சிறுவயதிலிருந்தே Xiaoma-வின் நாசி குழியில் ஒரு பகடை (dice) சிக்கியிருந்தது தெரியவந்தது. மேலும், இதுவே அவரது நீண்டகால அசௌகரியத்திற்கு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.
Shanxi மாகாணத்தை சேர்ந்த Xiaoma என்பவருக்கு கடந்த ஒரு மாதமாக உடல்நிலை மோசமடைந்து வந்துள்ளது. இதையடுத்து அவர், Xi’an Gaoxin என்ற மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட எண்டோஸ்கோபியின் போது, டாக்டர்கள் அவரது நாசிப் பாதையில் இரண்டு சென்டி மீட்டர் பகடை (dice) இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர். அந்த பகடை ஒரு பகுதி அரிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. மேலும், இது பல ஆண்டுகளாக அவரது நாசி திசுக்களில் சேதத்தை ஏற்படுத்தி வந்ததையும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
சியோமாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் யாங் ரோங், இதில் உள்ள ஆபத்தை விளக்கினார். அவர் கூறியதாவது, சியோமாவின் நாசிப் பாதையில் இரண்டு சென்டி மீட்டர் அளவிலான பகடை இருந்தது. இது நீண்ட காலமாக அவரது நாசி குழிக்குள் இருந்ததால் ஒரு பகுதி அரிக்கப்பட்டு இருந்தது என்றார்.
இந்நிலையில், அவர் மூன்று அல்லது நான்கு வயதாக இருந்தபோது பகடை எதிர்பாராத விதமாக அவரது மூக்கில் நுழைந்திருக்கலாம் என்று Xiaoma பின்னர் தெரிவித்தார். இதையடுத்து மிக கவனமாக சியோமாவின் நாசிப் பாதையில் இருந்த இரண்டு சென்டி மீட்டர் அளவிலான பகடை அகற்றப்பட்டது. ஏனெனில், ஏதேனும் தவறாக கையாளப்பட்டால் அது மூச்சுப் பாதையில் விழுந்து மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்பட்டது.