இரண்டு போலீஸார்கள், கைது செய்ய வந்த இடத்தில் கைத்தட்டி, கையில் கோலுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனைத்து ஊர்களிலுமே, காவலர்களுக்கு ஏதேனும் புகார் சென்றால் அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து என்ன பிரச்சனை என்று பார்ப்பர். அது போல, வெளிநாட்டில் ஒரு நகரில் அதிக சத்தம் வருவதாக கூறி காவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடைசியில் இங்கு வந்து பார்த்தால், இந்தியர்கள் தங்களின் கடவுளை வழிப்பட்டு பூஜை செய்து கொண்டிருப்பர்.
அங்கு பிரச்சனையை விசாரிக்க வந்த போலீஸாரின் கையில் பூஜை தட்டை கொடுத்து ஆரத்தி எடுக்க வைத்திருக்கின்றனர். பின்னர் கையில் கோல் கொடுத்து ஆட வைத்திருக்கின்றனர். அந்த காவலர்களும் கூட்டத்துடன் கூட்டமாக சேர்ந்து, கைத்தட்டி நடனமாடுகின்றனர். இதை வீடியோவாக எடுத்து யாரோ இணையத்தில் வைரலாக்கியிருக்கின்றனர். இப்போது வரை இந்த வீடியோ பல மில்லியன் வியூஸ்களை கடந்து, 5 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ்களை தாண்டியிருக்கிறது.
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் தங்களின் கருத்துகளை கமெண்ட் செக்ஷனில் பகிர்ந்திருக்கின்றனர். ஒரு சிலர், ஏதோ ஒரு இந்திய ஆண்டிதான் இவர்களை இதை செய்ய வைத்திருப்பார் என்று கூற, இன்னும் சிலர், இது தங்களுக்கு மனம் முழுக்க மகிழ்ச்சியை தருவதாக கூறி வருகின்றனர். இன்னும் சிலர், இப்படித்தன் உண்மையாகவே ஒரு இந்திய பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.